Wednesday, February 8, 2012

Kaanchi Pattu

அன்றைக்கு என்னவோ பெருமாள் கோவிலில் தரிசனம் சீக்கரம் முடிந்து விட்டது. 
" சரி, காமாட்சி அம்மன் கோயிலுக்கு போவோமா, சூப்பரா அலங்கரிசுருப்பாங்க" என்றேன். அவனும் சரி என்றான்.

போகும் வழியில் ஒரு ஜவுளிக்கடை. ஒரிஜினல் காஞ்சிவரம் பட்டுப்புடவை கிடைக்கும் என்று படித்தேன். பட்டுப்புடவையின் மேல் எனக்கு அப்படி ஒன்றும் ஆசை இல்லை. ஆனால் அதில் உள்ள கலர் மற்றும் ஷைனிங் எனக்கு பிடிக்கும். 
"சரி உள்ளே வா சென்று பார்ப்போம்" என்றான். 

"சார், புடவை எடுக்கணும், ரொம்ப சரிக வேணாம். சிம்பிலா இருந்தா போதும்" என்றான்.
"இங்க காஞ்சி காடன்ல பட்டு இருக்கா? டிரை கிளீன் இல்லாம, நார்மல் வாஷ்" என்றேன். 
"இருக்கு சார், இது எல்லாம் காட்டன் தான். பட்டு மாதிரி இருக்கும். நார்மல் வாஷ்.... என்ன கலர் சார் பாகரிங்க" என்றார் கடைக்காரர்.
"இதோ இவன் கலர்க்கு எது எடுப்பா இருக்கும்?" என்று கூறியபடியே மஞ்சள் நிறத்தில் ஒரு புடவையை பார்த்தான். 
"டார்க் கலர்ஸ் சூட்டாகும் சார்...  இதோ இந்த கலர் பாருங்க" என்று அரக்கு நிறத்தில் ஒன்றை எடுத்து காட்டினார் கடைக்காரர். 

"ம்ம்... அந்த லைட் ப்ளூ கலர் எடுங்க... டேய், இது நல்லா இருக்கா? அவங்களுக்கு பிடிக்குமா" என்று கண்களில் ஓர் மிளிர்வுடன் குறும்பு புன்னகை புரிந்தான்.  "இல்லடா. முதல் முதல்ல எடுத்து கொடுக்குற- அவங்களுக்கு பிடிச்ச கலராவே இருக்கட்டுமே... அதோ அந்த ரெட் எடுங்க" என்றேன்.

"ஓகே பரவாயில்லை இதுவும் நல்லா தான் இருக்கு... சார் பிரிச்சி பாக்கலாமா" என்று அவன் கேட்க கடைக்காரரும் "பாருங்க பாருங்க" என்றார். 

"ம்ம்... லைக் திஸ்" என்று என் மேல அந்த புடவையை போர்த்தி பார்த்தான். "கலர் கரெக்டா தான் இருக்கு" என்றான்.  கடைக்காரரும், "மாநிறத்துக்கு இந்த கலர் பொருத்தமா இருக்கும்" என்றார்.

"முந்தானை டிசைன் எப்படி இருக்கு" என்று கூறிக்கொண்டே அந்த புடவையை முழுவதுமாக பிரித்தான். 
"ஸ்வீட் ஹார்ட் இப்படி நில்லு, உன் ஹெயடுக்கு இந்த டிசைன் எங்க வருதுன்னு  பார்ப்போம்" என்றான். 
நான் அவனை முறைத்தேன்... 
"ம்ம்.. வா, இங்க வா- ஹியர் இஸ் தி மிரர்" என்றான். 
"ஹே ஓவரா பண்ணாத. வேணும்னா நீ கட்டி பாரு" என்று கூறினேன். 
"உன் கலர் உன் உயரம் தான் ரெபரன்ஸ். சோ ப்ளீஸ் ஹெல்ப்" என்று நாடகமாடினான். 
"ஹி இஸ் கோண திராஸ் அஸ் அவுட்" என்று கூறினேன் அவன் காதோரமாக.

"சார், இவர் மேல இந்த பொடவயை வச்சு பாக்கலாமா? அவங்க இவன் ஹைட் தான் இருப்பாங்க" என்றான். கடை காரரும் சிரித்துக்கொண்டே " தாராளமா" என்றார். 

"ஓகே சொல்லிட்டாரு, கம்" என்று என்னை அழைத்து கண்ணாடி முன் நிற்க வைத்தான். 
முந்தானையை என் தோலில் போட்டு, மீதி புடவையை என் இடுப்பின் மேல் வைத்து பார்த்தான். "ம்ம்.. சூப்பர். யு நோ வாட்? லெட் மீ ராப் திஸ் அறௌண்டு யு, இதுவும் வேஷ்டி மாதிரி தான் " என்று மட மடவென புடவையை என் இடுப்பில் சுத்தினான். 

"அட பாவி" என்று அதிர்சியில் உறைந்தேன். 
ஒரே நிமிடத்தில் நான் புடவையில் மாறினேன். நல்ல வேலையாக நாங்கள் கடையின் ஒரு மூலையில் இருந்ததால் ஒரு சிலருக்கு மட்டுமே என் வேடிக்கை தரிசனம் விருந்தானது. 

குலுங்க குலுங்க சிரித்துக்கொண்டு "கிளிக்" என்று அவன் போனில் போட்டோ பிடித்தான்.
"லூசு, கெட் மீ அவுட் ஆப் திஸ்" என்று அவன் மீது பாய்ந்து விட்டு, புடவையை கழற்றி அவன் கையில் கொடுதேன். 
"டேய் நில்லுடா, நானும் வரேன்..." என்று கத்திகொண்டே என் பின்னே விரைந்தான்.
"கெட் லாஸ்ட்" என்று கூறியபடி கடையை விட்டு வெளியே வந்தேன். இரு கடைகள் தள்ளி நின்று வயிறு வலிக்க சிரித்தேன். 

"எப்படிடா வெளியே வந்தே, கடைக்காரர் விட மாட்டான்னு நெனச்சேன்" என்றேன். 
"இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆயிடும், பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டேன்"  என்றான். 

செல்போனை பார்த்து "ம்ம்.. அம்மா அலங்காரம் அற்புதம்" என்று சிரத்தான். "சட் அப்" என்று சொல்லி நானும் சிரித்தேன். 

இருவரும் சிரித்துக்கொண்டே சிறிது தூரம் செல்ல தங்க நகைக்கடை ஒன்றை பார்த்தோம். "பொடவ பாத்தாச்சு...  இப்ப ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, கொலுசு எல்லாம் ட்ரை பண்றியா? ம்ம்.. அப்புறம் தாலிய மறந்துட்டேனே? " என்றான்.  ஓட்டம் பிடித்தேன். 

Saturday, February 4, 2012

Sugama

அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா ?

தலைவா சுகமா?
சுகமா?
உன் தனிமை சுகமா?
சுகமா?


வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று 
விலக்கை அணைத்து அழுதேன் 

அன்பே உன்னை வெறுத்தேன் 
என் அறிவை நானே ஏரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு 
உயிரில் பாதி குறைந்தேன் 

பழைய மாலையில் 
புதிய பூக்கள்தான் 
சேராதா?
பழைய தாலியில் 
புதிய முடிச்சுகள் 
போடாதா?

வாழ்கை ஓர் வட்டம்போல் 
முடிந்த இடத்தில் தொடங்காதா ?


வாழ்கை ஓர் வட்டம்போல் 
முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா ?

சிறுமை கண்டு தவித்தேன் 
என் சிறகில் ஒன்றை முறித்தேன் 
ஒற்றை சிறகில் ஊன பறவை 
எத்தனை தூரம் பறப்பேன் 

அன்பே உன்னை அழைத்தேன் 
உன் அஹிம்சை இம்சை பொறுப்பேன் 
சீதை குளித்த நெருப்பில் என்னை 
குளிக்க சொன்னால் குளிப்பேன் 

அழுத நீரில் கரைகள் போய்விடும் 
தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் 
புரியாதா?

இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்க ஒட்டாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்க ஒட்டாதா?

அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா ?

தலைவா சுகமா?
சுகமா?
உன் தனிமை சுகமா?
சுகமா?

கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா?
என் ஓற்றை தலையணை சுகமா? 

Insomnia

Its been days now that I could not sleep on time. When I go to bed, I just could not sleep. My eyes closed, my mind has a million thoughts. All unclear. Just some shadows at lightening speed. Earlier, the speed of these thoughts used to even scare me. I'm not sure if am insane. I'm just not sleeping. Just to give those thoughts a break, I will get up- read something and sit in front of the computer listening to some music or watching some videos. Finally will get extremely tired and will fall asleep early morning only to be woken up by the alarm. For the first time after six days, I slept for eight hours today and woke up near afternoon. 

Tonight again- I went to bed and could not sleep. I'm awake again. I'm not sure how long is this going to continue. The last time I had these insomniac behavior was years ago. But that time, I thought I had some real reasons. This time I don't even know why. Let's see how long I can go without pills.. 
Lets see.