அன்றைக்கு என்னவோ பெருமாள் கோவிலில் தரிசனம் சீக்கரம் முடிந்து விட்டது.
" சரி, காமாட்சி அம்மன் கோயிலுக்கு போவோமா, சூப்பரா அலங்கரிசுருப்பாங்க" என்றேன். அவனும் சரி என்றான்.
போகும் வழியில் ஒரு ஜவுளிக்கடை. ஒரிஜினல் காஞ்சிவரம் பட்டுப்புடவை கிடைக்கும் என்று படித்தேன். பட்டுப்புடவையின் மேல் எனக்கு அப்படி ஒன்றும் ஆசை இல்லை. ஆனால் அதில் உள்ள கலர் மற்றும் ஷைனிங் எனக்கு பிடிக்கும்.
"சரி உள்ளே வா சென்று பார்ப்போம்" என்றான்.
"சார், புடவை எடுக்கணும், ரொம்ப சரிக வேணாம். சிம்பிலா இருந்தா போதும்" என்றான்.
"இங்க காஞ்சி காடன்ல பட்டு இருக்கா? டிரை கிளீன் இல்லாம, நார்மல் வாஷ்" என்றேன்.
"இருக்கு சார், இது எல்லாம் காட்டன் தான். பட்டு மாதிரி இருக்கும். நார்மல் வாஷ்.... என்ன கலர் சார் பாகரிங்க" என்றார் கடைக்காரர்.
"இதோ இவன் கலர்க்கு எது எடுப்பா இருக்கும்?" என்று கூறியபடியே மஞ்சள் நிறத்தில் ஒரு புடவையை பார்த்தான்.
"டார்க் கலர்ஸ் சூட்டாகும் சார்... இதோ இந்த கலர் பாருங்க" என்று அரக்கு நிறத்தில் ஒன்றை எடுத்து காட்டினார் கடைக்காரர்.
"ம்ம்... அந்த லைட் ப்ளூ கலர் எடுங்க... டேய், இது நல்லா இருக்கா? அவங்களுக்கு பிடிக்குமா" என்று கண்களில் ஓர் மிளிர்வுடன் குறும்பு புன்னகை புரிந்தான். "இல்லடா. முதல் முதல்ல எடுத்து கொடுக்குற- அவங்களுக்கு பிடிச்ச கலராவே இருக்கட்டுமே... அதோ அந்த ரெட் எடுங்க" என்றேன்.
"ஓகே பரவாயில்லை இதுவும் நல்லா தான் இருக்கு... சார் பிரிச்சி பாக்கலாமா" என்று அவன் கேட்க கடைக்காரரும் "பாருங்க பாருங்க" என்றார்.
"ம்ம்... லைக் திஸ்" என்று என் மேல அந்த புடவையை போர்த்தி பார்த்தான். "கலர் கரெக்டா தான் இருக்கு" என்றான்.
கடைக்காரரும், "மாநிறத்துக்கு இந்த கலர் பொருத்தமா இருக்கும்" என்றார்.
"முந்தானை டிசைன் எப்படி இருக்கு" என்று கூறிக்கொண்டே அந்த புடவையை முழுவதுமாக பிரித்தான்.
"ஸ்வீட் ஹார்ட் இப்படி நில்லு, உன் ஹெயடுக்கு இந்த டிசைன் எங்க வருதுன்னு
பார்ப்போம்" என்றான்.
நான் அவனை முறைத்தேன்...
"ம்ம்.. வா, இங்க வா- ஹியர் இஸ் தி மிரர்" என்றான்.
"ஹே ஓவரா பண்ணாத. வேணும்னா நீ கட்டி பாரு" என்று கூறினேன்.
"உன் கலர் உன் உயரம் தான் ரெபரன்ஸ். சோ ப்ளீஸ் ஹெல்ப்" என்று நாடகமாடினான்.
"ஹி இஸ் கோண திராஸ் அஸ் அவுட்" என்று கூறினேன் அவன் காதோரமாக.
"சார், இவர் மேல இந்த பொடவயை வச்சு பாக்கலாமா? அவங்க இவன் ஹைட் தான் இருப்பாங்க" என்றான். கடை காரரும் சிரித்துக்கொண்டே " தாராளமா" என்றார்.
"ஓகே சொல்லிட்டாரு, கம்" என்று என்னை அழைத்து கண்ணாடி முன் நிற்க வைத்தான்.
முந்தானையை என் தோலில் போட்டு, மீதி புடவையை என் இடுப்பின் மேல் வைத்து பார்த்தான். "ம்ம்.. சூப்பர். யு நோ வாட்? லெட் மீ ராப் திஸ் அறௌண்டு யு, இதுவும் வேஷ்டி மாதிரி தான் " என்று மட மடவென புடவையை என் இடுப்பில் சுத்தினான்.
"அட பாவி" என்று அதிர்சியில் உறைந்தேன்.
ஒரே நிமிடத்தில் நான் புடவையில் மாறினேன். நல்ல வேலையாக நாங்கள் கடையின் ஒரு மூலையில் இருந்ததால் ஒரு சிலருக்கு மட்டுமே என் வேடிக்கை தரிசனம் விருந்தானது.
குலுங்க குலுங்க சிரித்துக்கொண்டு "கிளிக்" என்று அவன் போனில் போட்டோ பிடித்தான்.
"லூசு, கெட் மீ அவுட் ஆப் திஸ்" என்று அவன் மீது பாய்ந்து விட்டு, புடவையை கழற்றி அவன் கையில் கொடுதேன்.
"டேய் நில்லுடா, நானும் வரேன்..." என்று கத்திகொண்டே என் பின்னே விரைந்தான்.
"கெட் லாஸ்ட்" என்று கூறியபடி கடையை விட்டு வெளியே வந்தேன். இரு கடைகள் தள்ளி நின்று வயிறு வலிக்க சிரித்தேன்.
"எப்படிடா வெளியே வந்தே, கடைக்காரர் விட மாட்டான்னு நெனச்சேன்" என்றேன்.
"இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆயிடும், பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டேன்" என்றான்.
செல்போனை பார்த்து "ம்ம்.. அம்மா அலங்காரம் அற்புதம்" என்று சிரத்தான். "சட் அப்" என்று சொல்லி நானும் சிரித்தேன்.
இருவரும் சிரித்துக்கொண்டே சிறிது தூரம் செல்ல தங்க நகைக்கடை ஒன்றை பார்த்தோம். "பொடவ பாத்தாச்சு... இப்ப ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, கொலுசு எல்லாம் ட்ரை பண்றியா? ம்ம்.. அப்புறம் தாலிய மறந்துட்டேனே? " என்றான். ஓட்டம் பிடித்தேன்.
No comments:
Post a Comment