Sunday, December 5, 2010

Paarthalae Paravasam

அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா ?

தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?


வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று 
விலக்கை அணைத்து அழுதேன் 

அன்பே உன்னை வெறுத்தேன் 
என் அறிவை நானே ஏரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு 
உயிரில் பாதி குறைந்தேன் 

பழைய மாலையில் 
புதிய பூக்கள்தான் 
சேராதா?
பழைய தாலியில் 
புதிய முடிச்சுகள் 
போடாதா?

வாழ்கை ஓர் வட்டம்போல் 
முடிந்த இடத்தில் தொடங்காதா ?


வாழ்கை ஓர் வட்டம்போல் 
முடிந்த இடத்தில் தொடங்காதா?

சிறுமை கண்டு தவித்தேன் 
என் சிறகில் ஒன்றை முறித்தேன் 
ஒற்றை சிறகில் ஊன பறவை 
எத்தனை தூரம் பறப்பேன் 

அன்பே உன்னை அழைத்தேன் 
உன் அகிம்சை இம்சை பொறுப்பேன் 
சீதை குளித்த நெருப்பில் என்னை 
குளிக்க சொன்னால் குளிப்பேன் 

அழுத நீரில் கரைகள் போய்விடும் 
தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் 
புரியாதா?

இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்கள் ஒட்டாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்கள் ஒட்டாதா?

அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா ?

தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?

கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா?
என் ஓற்றை தலையணை சுகமா? 

No comments: